1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 15 மே 2023 (19:40 IST)

மெலிந்த உடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர போராடும் ரோபோ சங்கர்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். இவரது வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகர்களோடு நடித்து, தற்போது பிரபலமாக உள்ள ரோபோசங்கர், ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கினார்.
 
நல்ல அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ரோபோ சங்கர் சமீபகாலமாக உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக மாறியுள்ளார். அவருக்கு மஞ்சள் காமாலை வந்து கல்லீரல் பாதிக்கப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. 
 
ரோபோ சங்கர் ஒரு அசைவ உணவுப்பிரியர் மற்றும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். இதனாலும் அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது அவர் குணமடைந்து வருகிறார். மீண்டும் பழைய உடலை கொண்டு வர அவர் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by PriyankaRoboSankar