புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (14:32 IST)

ஐ லவ் யூ ஸ்ருதி... மனைவியின் காதலில் உருகிய ரியோ!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அப்போது அதே தொலைக்காட்சியில் வேலை பார்த்த ஸ்ருதி என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
 
ரியோ பிரபலமாவதற்கு முன்னரே ஸ்ருதி அவரது நண்பராக இருந்து வந்தார். இவர்கள் இருவரும் அண்ணா யுனிவர்சிட்டியின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது அங்கு ஸ்ருதி திடீர்னு ஸ்ருதி தன் காதலைச்சொல்லி இருக்கிறார். பின்னர் இரண்டு நாள் கழித்து ஸ்ருதிக்கு ஓகே சொல்லியிருக்கிறார் ரியோ.
 
பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்க  "ரித்தி" என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரியோ நிறைய விமர்சனங்களை உள்ளாகி பெயரை கெடுத்துக்கொண்டார். 
 
இருந்தும் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதே போல் ஸ்ருதியும் பிக்பாசில் இருந்து வீட்டிற்கு வந்த கணவருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்து வரவேற்றார். இந்நிலையில் தற்போது ரியோ 4ம்  ஆண்டு திருமண நாளை திருமண நாளை கொண்டாடி ரொமான்டிக் புகைப்படங்களுடன்  அழகிய கேப்ஷன் கொடுத்து பதிவிட்டு வாழ்த்து மழையில்  நனைந்து வருகிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rio Raj (@rio.raj)