1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (15:34 IST)

ஆரியின் வெற்றியை மேடையில் பார்க்கத்தான் ரியோ... பிரபலத்தின் பதிவு!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரியோவின் பொய்யான முகத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,  " ரியோவின் பேச்சும், சிரிப்பும், ஆட்டமும், பாட்டமும் எவ்வளவு நிஜமற்றது என்று கடந்த 2 நாட்களாக நிரூபணமானது. 
 
1. மூன்று நாட்களுக்கு முன், சற்று ஒதுங்கி அமைதியாயிருந்த ஆரியிடம் வலியச் சென்று "இன்னும் மூன்று நாள்தான் ப்ரோ, சகஜமா ஜாலியா இருங்க, எல்லாரோடயும் சேருங்க ப்ரோ" என்று தோரணையுடன் அட்வைஸ் பண்ணிவிட்டு அத்தோடு பதுங்கியவர்தான், இன்னும் அவரைக் காணாமல் எல்லாரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
 
நேற்று நிஷா அவரை "ஏண்டா இப்புடி இருக்க? உன் மூஞ்சியப் பாக்க சகிக்கல" என்று பார்வையாளர்கள் எல்லார் சார்பிலும் கேட்டது நமக்கு ஆறுதலாயிருந்தது. 
 
2. கேபியை ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் அணைத்து, அரவணைத்து தன் பாசத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தவர், அவர் 5 லட்ச பெட்டியை எடுத்துவிட்டார் என்றவுடன் அதைத் தனக்குத் தந்துவிடும்படி கெஞ்சிக் கூத்தாடி,  emotional blackmail செய்து, போராடியும் பார்த்துத் தோற்று அடங்கிப்போனார். அந்த அன்பும், உறவும் எங்கே போனது?
 
ஞாயிறு நிகழ்ச்சியில் ஆரியின் வெற்றியை மேடையில் வேடிக்கைப் பார்த்து கைதட்டப் போகிற நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் நினைத்து நினைத்து நொந்துபோவதைப் பார்க்கமுடிகிறது. அதனால் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறத் திட்டமிட்டிருந்தார். அதுவும் மணல்கோட்டையானது! அதனால்தான் நிஷாவிடம் சொன்னார், "evict ஆகிப் போயிருந்தால் கூட சிரித்துக்கொண்டே போயிருப்பேன்" என்று. The audience had predicted this long ago! " என்று கூறியுள்ளார்.