திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (22:14 IST)

மாணவர்களுக்கு இடஒதுக்கீடு...நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு

தமிழக சட்டசபையில் இன்று தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை  நடிகர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா மீதான விவாதத்தில் இந்த மசோதாவை ஒரு மனதுடன் ஆதரிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் ஆதரவும் உள்ளதால் இன்றே இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இளநிலை தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு எனும் சட்டமுன்வடிவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிக மிகக் குறைவாக உள்ளதால், ஆணையம் பரிந்துரைத்தபடி இந்த உள் ஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.