1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (16:07 IST)

திரையரங்குகள் திறப்பது குறித்த வழிகாட்டி நெறிமுறை வெளியீடு !

தமிழகத்தில் வரும்  நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள்  திறக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில் கொரொனாவிலிருந்து மக்களைப் பாதுக்காக்கும் வகையில்  தொற்று மேலும் பரவாத வகையிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி,  திரையரங்குகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், திரையரங்குகளில்  50% இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டுமெனவும்,  திரையரங்கு வளாகத்தில் நுழைபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், தெர்மல் பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

காட்சி நேரங்களுக்கு இடையே போதுமான இடைவெளி அளிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே கொரோனா தொற்றுப் பகுதிகளில் திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.