ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Modified: புதன், 19 ஜூலை 2017 (19:45 IST)

தனுஷின் குழப்பத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

முதலில் கெளதம் மேனனுக்கு கால்ஷீட் தருவதா? இல்லை, வெற்றிமாறனுக்கு கால்ஷீட் தருவதா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் தனுஷ்.


 
 
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ஹாலிவுட் படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபஹிர்’. மும்பையில் நடைபெற்ற இந்தப் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. அனேகமாக, இம்மாத இறுதிக்குள் சென்னை திரும்பும் தனுஷ், செப்டம்பர் மாதம் முதல் பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி 2’ படத்தில் நடிக்கப் போகிறார்.
 
இடையில் இருக்கும் ஒரு மாதத்துக்குள், இரண்டு படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ். ஒன்று, வெற்றிமாறன் இயக்கிவரும் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாகம், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இரண்டாவது, கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்துக்கு இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் பாக்கியிருக்கிறது. இரண்டு படங்களில், எந்தப் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறாராம் தனுஷ்.