வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 25 டிசம்பர் 2021 (09:59 IST)

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனால் தாமதமாகிறதா அருண் விஜய் படம்!

அருண் விஜய் மற்றும் அவரின் மகன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஓ மை டாக் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக அமேசான் நிறுவனத்தோடு 4 படங்களை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி டிசம்பர் மாதம் அருண் விஜய் மற்றும் அவரின் மகன் நடித்திருக்கும் ஓ மை டாக் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அது குறித்த எந்த தகவலும் அதன் பின்னர் வெளியாகவில்லை. இப்போது அந்த படம் மார்ச் மாதம் ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த தாமதத்துக்குக் காரணம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இன்னும் இசையமைக்கும் பணிகளை முடிக்காததே என்று சொல்லப்படுகிறது.