திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (15:44 IST)

எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? இதுதான் காரணமாம்!

சூர்யா மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு முடிந்து பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்ச் 10ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் தாமதமாக படம் ரிலீஸாவதற்கு காரணம் படத்தின் முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லையாம். அதன் காரணமாகவே ரிலிஸ் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம்.