திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2024 (08:14 IST)

ஓய்வுக்குமுன் இன்னோர் உச்சம் தொடுங்கள்: ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வைரமுத்து..!

vairamuthu
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைதளத்தில் ஓய்வுக்கு முன் இன்னோர் உச்சம் தொடுங்கள் என்று கூறி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
 
வயிற்றில்
தொப்பை சேராத உடலோடும்
தலையில்
கர்வம் சேராத மனதோடும்
அரைநூற்றாண்டாய்
ஒரு நட்சத்திரம்
உச்சத்தில் இருப்பது
அத்துணை எளிதல்ல
 
ஆனால் இன்னும்
தேயாத கால்களோடு
ஓயாத ஓட்டம்
 
சூப்பர் நண்பரே!
ஓய்வு குறித்த சிந்தனை
உங்களுக்குண்டா?
தெரியாது
 
ஆயினும் ஒரு யோசனை
 
ஓய்வுக்குமுன்
இன்னோர் உச்சம் தொடுங்கள்
அல்லது
இன்னோர் உச்சம் தொட்டபின்
ஓய்வு பெறுங்கள்
 
 
Edited by Siva