செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (15:18 IST)

சினிமாவிலும் கால்பதித்த ரத்தன் டாடா… ஆனால் ஒரு படத்தோடு முற்றுப்புள்ளி!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா என்பதும், அவருக்கு தற்போது 86 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அவர் நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  அவர் சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவில் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 86. இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரத்தன் டாட்டாவின் கொள்ளுத்தாத்தா ஜாம்ஷெட்ஷி டாட்டாவின் காலத்தில் இருந்து அவர்கள் குடும்பம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனக் குடும்பமாக உள்ளது. உப்பு முதல் தங்கம் வரை அவர்கள் செய்யாத தொழிலே இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில்தான் ரத்தன் டாடா சினிமாவிலும் கால்பதித்தார். அமிதாப் பச்சன் மற்றும் ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நடித்த ‘ஏட்பார்’ என்ற படத்தை 2004 ஆம் ஆண்டு தயாரித்தார். ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அதன் பின்னர் அவர் படம் தயாரிக்கவே இல்லை.