வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (14:21 IST)

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது! மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம்!

Ratan Tata Quotes

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா நேற்று இரவு காலமான நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

பிரபலமான இந்திய தொழில் நிறுவனமான டாடா நிறுவன குழும தலைவர் ரத்தன் டாடா. தொழிலதிபராக மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மக்களுக்கு பல உதவிகளையும் தொடர்ந்து செய்து வந்தவர் ரத்தன் டாடா. 

 

நேற்று இரவு உடல்நலக்குறைவால் ரத்தன் டாடா காலமான நிலையில் அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. 
 

 

ரத்தன் டாடா இதுவரை இந்திய அரசின் பத்ம விருதுகளான பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்திய பொருளாதாரத்தின், கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

 

இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டசபையில் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K