செவ்வாய், 4 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 மார்ச் 2025 (09:56 IST)

ராஷ்மிகா கர்நாடகாவை அவமதிக்கிறார்… நாம் பாடம் புகட்டவேண்டும் – சட்ட மன்ற உறுப்பினர் ஆவேசம்!

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான்.  கிரிக் பார்ட்டி எனும் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் அதிகமாக கன்னட படங்களில் நடிக்கவில்லை. அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் நடிப்பில் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய இரண்டும் வெற்றி பெற்று அவரை உச்ச நடிகையாக்கின. தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கர்நாடகாவை அவமதிப்பதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம் எல் ஏ ரவிகுமார் கௌடா பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து, கன்னட திரைப்படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மறுக்கிறார். 10 முறைக்கும் மேலும் நேரில் சென்று அழைத்தும் அவர் மதிக்கவில்லை. அவர் கர்நாடக மாநிலத்தையே அவமதிக்கிறார். அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.