’தல’க்குப் பின் மக்கள் செல்வனோடு மோதும் ரங்கராஜ் பாண்டே ?
நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பின் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே திடீரென அங்கிருந்து வெளியேறினார். அதன் பின் யாரும் எதிர்பாராத விதமாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்தார். ஊடகங்களில் கலக்கிய அவருக்கு நடிப்பு பெரிதாக வரவில்லை என கமெண்ட்கள் வந்தன.
ஆனாலும் படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார். இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் பாண்டே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.