ரெங்கம்மாள் பாட்டி மரணம்!
தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை ரங்கம்மா உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் ரங்கம்மாள் நடித்துள்ளார். நீண்ட காலமாக உடல் நலக் குறைவால், பாதிக்கப்பட்டிருந்த ரங்கம்மாள் கோவை மாவட்டம் அன்னூர் அருகே தெலுங்குபாளையத்தில் உறவினர்கள் இல்லத்தில் வசித்து வந்தார். ரங்கம்மாள் பாட்டியின் இறுதிச்சடங்கு தெலுங்குபாளையத்தில் நடைபெறுகிறது.
இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.