நயன்தாரா, சமந்தாவை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை
கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் டாப் 5 ஹீரோக்களின் பட்டியலில் இடம்பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன். ஒருகாலத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகள் தயங்கினர்.
ஆனால் அவருடைய அபார வளர்ச்சியை பார்த்து பின்னர் ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ரகுல் ப்ரித்திசிங் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவிருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளதை இயக்குனர் உறுதி செய்துள்ளார். சயின்ஸ்பிக்சன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கவுள்ளது.
ரகுல் ப்ரித்திசிங் ஏற்கனவே சூர்யா-செல்வராகவன் படத்திலும், கார்த்தி ஜோடியாக ஒரு படத்திலும் தமிழில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.