வியாழன், 12 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 16 ஜூலை 2024 (07:09 IST)

போதைப்பொருள் விவகாரம்; ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது..!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் அமன் ப்ரீத் சிங் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் விவகார வழக்கில் ரகுல் பிரீத் சிங் விசாரணை செய்யப்பட்டார் என்பதும் அவர் மீதான வழக்கு இன்னும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சகோதரர் அமல் ப்ரீத் சிங் உள்பட ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் இவர்களிடம் இருந்து போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஐந்து பேரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் நடத்திய விசாரணையில் நைஜீரியரிடம் இருந்து போதை பொருள் வாங்கியதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் அதிகம் நடமாடுவதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது பிரபல நடிகையின் சகோதரரே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva