திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (19:49 IST)

ரஜினியின் 'பேட்ட' ட்ரைலர் அறிவிப்பு!

ரஜினிகாந்தின் பேட்ட பட ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது! 


 
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட திரைப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை இயக்குனரும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகருமான கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி, ஜோடியாக சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
ரஜினியின் 165-வது திரைப்படமான இதனை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. ராக்ஸ்டார்  அனிருத் இசையமைத்திருக்கும் பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 
 
இந்தப் படத்தின் டீசர், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் அமோக லைக்ஸை குவித்தது. 
 
இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக வரும் ஜனவரி 1-ம் தேதி பேட்ட திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.