1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 25 மே 2017 (14:08 IST)

கம்முனு இருங்க..இல்லனா தூக்கிடுவேன் - ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ரசிகர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கி விடுவேன் என நடிகர் ரஜினிகாந்த் எச்சரித்துள்ளார்.


 

 
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ரசிகர்கள் சந்திப்பில் சில குளறுபடிகள் ஏற்பட்டது. சில நிர்வாகிகளின் உதவியால் அனுமதி பெறாமல் பலர் தங்களின் குடும்பங்களை அழைத்து வந்திருந்தனர். இந்த விவகாரம் ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே, இதுபற்றி ரஜினிகாந்த், ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நிக்க, தலைமை நிர்வாகி சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன் என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.


 
 
இந்த விவகாரம் சில ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.