'விக்ரம்’ படம் பார்த்த ரஜினி கூறியது என்ன தெரியுமா?
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தை தமிழ் திரையில் உள்ள பல பிரபலங்கள் பார்த்து கமல்ஹாசன் உள்பட படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் விக்ரம் திரைப்படத்தை நேற்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவுடன் ரஜினிகாந்த் படம் சூப்பராக உள்ளது என கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர்களிடம் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படம் ரிலீஸுக்கு முன்னரே இந்தப் படம் வெற்றி பெற கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவருக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.