சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’: டிரைலர் ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா: டிரைலர் ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தின் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் வடிவத்தில் உருவாக்கப்பட்ட பாபா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது
இந்த படத்திற்காக ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் செய்தார் என்பதும் பின்னணி இசையில் ஏஆர் ரகுமான் சில மாற்றங்களை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 20 வருடத்திற்கு முந்தைய ரஜினியின் ஸ்டைல் மற்றும் ஆக்சன் காட்சிகள் மீண்டும் வெளியாகும் இந்த பாபா படத்தின் மூலம் ரசிகர்கள் பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran