புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (10:24 IST)

காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக நடிகர் சங்கம் போராட்டம்: ரஜினி, அஜித், விஜய் கலந்து கொள்வார்களா?

நாளை நடைபெற இருக்கும் போராட்டத்தில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற இருக்கிறது.



நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து கொண்டன. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதேசமயம், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.