1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 26 ஜூன் 2017 (13:07 IST)

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது - நடிகர் கவுதம் கார்த்திக் அதிரடி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி ஊடகங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என திருமாவளவன், தமிழருவி மணியன் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், சீமான், சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் திருச்சிக்கு வந்திருந்த நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பிய போது  “ ரஜினி சார் அரசியலுக்கு வரக்கூடாது. அவர் எப்போதும் திரையுலக சூப்பர்ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை” என அவர் தெரிவித்தார்.
 
அதேபோல், எனது தந்தை கார்த்திக் அரசியலில் இருந்தாலும், எதிர்காலத்தில் நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்  என அவர் தெரிவித்தார்.