திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (17:49 IST)

நடிகர் சூர்யா உள்ளிட்ட கலைஞர்களை பாராட்டிய ரஜினி !

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில், தேசிய விருதுகள் வென்ற கலைஞர்களுக்கு  நடிகர் ரஜினி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

நேற்று 2020 ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், சூர்யா  தயாரித்து, ஹீரோவாக நடித்திருந்த சூரரைப் போற்று படம் 5 விருதுகள் வென்று சாதனை படைத்தது.
அதேபோல் இயக்குனர் வசந்த் இயக்கிய சிவரஞ்சினியு இன்னும் சில பெண்களும் படம் 3 விருதுகளை வென்றது.  மேலும், யோகிபாபு நடித்த மண்டேலா படம் 2 விருதுகள் வென்றது. இந்த நிலையில், தமிழ் சினிமா 10 விருதுகளை வென்று பெருமைப்படவைத்துள்ளது.

இந்த நிலையில், தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஜினி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: #NationalFilmAwards தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும்
@Suriya_offl
 , சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் எனத் தெரிவித்துள்ளார்.