வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (16:09 IST)

நான் இன்னும் இசையமைக்க ரஜினி தான் காரணம் - ஏஆர் ரஹ்மான்

ரஜினிகாந்த் தான் எனக்கு பிடித்த நடிகர். அவரால் தான்  நான் இன்னும் இசையமைத்து கொண்டிருக்கிறேன் என்று 2.0 டிரைலர் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 
 
இந்த விழாவில் ரஹ்மானிடம், இசையமைப்பாளர் அனிருத், “நீங்கள் இசையமைத்த படங்களில் நடித்த நடிகர்களில் யார் உங்களுக்கு பிடித்த நடிகர்?” என்ற கேள்வியை கேட்டார். 
 
அதற்கு பதிலளித்த ரஹ்மான், “ரஜினிகாந்த் தான் எனக்கு பிடித்த நடிகராக உள்ளார். ஏனென்றால் அவரின் ஆன்மிக பாதை, கடின உழைப்பின் மூலம் அவர் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக உள்ளார். நான் ஆஸ்கார் வாங்கிய பின் என்னுடைய 40 வயதில் இசையமைக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற நினைத்தேன். 
 
ஆனால் ரஜினிகாந்த் இந்த வயதில் கடுமையாக உழைப்பதைப் பார்த்து வியந்தேன். அவரின் கடின உழைப்பு எனக்கு உந்துகோளாக இருந்தது. அதனால் தான் இன்றும் நான் இசையமைத்து வருகின்றேன்” என கூறியுள்ளார்.