1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 6 ஜனவரி 2018 (16:22 IST)

நட்சத்திர கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் சந்திப்பு; உற்சாகத்தில் ரசிகர்கள்

மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ரஜினிகாந்த் -கமல்ஹாசன் இருவரும் சந்தித்து கொண்டனர் 
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.  கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 
 
தற்பொழுது மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை நடிகர் சங்கம் கட்ட பயன்படுத்த உள்ளனர். இந்த விழாவில் ரஜினி, கமல், நாசர், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட 350 நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர். மலேசியா சென்ற ரஜினிகாந்தும், கலை நிகழ்ச்சிக்காக அமெரிக்கவில் இருந்து மலேசியாவுக்கு வந்த கமல்ஹாசனும் சந்தித்துக் கொண்டனர். மலேசிய கலைவிழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் பேசுவார்கள் என்றும், அப்போது அரசியல் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.