முதல் முறையாக நடிகராகக் களமிறங்கும் ஏ ஆர் ரஹ்மான்!
மோகன்லால் நடிக்கும் ஆராட்டு திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம்.
ஏ ஆர் ரஹ்மான், இப்போது ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துவிட்டு தமிழ் மற்றும் இந்திய மொழிப் படங்களில் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் அவர் இப்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடிகராக களமிறங்க உள்ளாராம். அதுவும் முழுமையான நடிகர் என சொல்லப்படும் மோகன் லால் படத்தில்.
மோகன் லால் நடிப்பில் ஆராட்டு என்ற ஆக்ஷன் மசாலா திரைப்படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை உன்னி கிருஷ்ணன் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் ரஹ்மான் நடிக்க உள்ளாராம்.