பீர் குடித்ததால் படத்திலிருந்து நீக்கப்பட்டேன்: ரஜினி பட கதாநாயகி வருத்தம்
பிரபல நடிகை ராதிகா ஆப்தே, அதிகமாக பீர் குடித்ததால் ஒரு ஹிந்தி படத்திலிருந்து நீக்கப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கோலிவுட்டில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நடிகர் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த ’கபாலி’ திரைப்படம் தான் ராதிகா ஆப்தேவை வெகுஜன ரசிகர்களிடம் கொண்டு சென்றது.
இதனிடையே இவர் பல வெற்றிகரமான பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தனது சினிமா அனுபவங்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார் ராதிகா ஆப்தே.
அந்த பேட்டியில், “பாலிவுட் திரைப்படமான ’விக்கி டோனார்’ படத்துக்கு என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தில் படபிடிப்பு தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்றிருந்தேன்.
அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன் அதன் பின்பு என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியாகி, என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்” என ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அந்த நிகழ்விற்கு பிறகு தான் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ராதிகா ஆப்தே தவறவிட்ட ‘விக்கி டோனர்’ திரைப்படம் பாலிவுட்டில் வெற்றி திரைப்படம் என்றாலும் பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.