விக்ரம் வேதா ரீமேக்கில் இணைந்த ராதிகா ஆப்தே!
இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் விக்ரம் வேதா ரீமேக்கில் ராதிகா ஆப்தே முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அமீர்கான் விலகவே அவருக்குப் பதில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார். அதையடுத்து இப்போது விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் தமிழில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.