யாரிடமும் பிச்சை எடுக்க தேவையில்லை – சர்ச்சையை கிளப்பிய ராதிகா ஆப்தே

radhika apte
Last Modified வெள்ளி, 26 ஜூலை 2019 (15:15 IST)
இந்தியின் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே பல சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர். தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் இந்திய சினிமாவை தாக்கி பேசியுள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் கபாலி. அழகுராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் பேட்டியளித்த போது “இந்திய சினிமாவை ஒப்பிடுகையில் ஹாலிவுட் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. படத்தயாரிப்பு, இயக்கம் என அனைத்திலும் நேரத்தை முறையாக கடைப்பிடிக்கிறார்கள். மேலும் சரியான நேரத்தில் சம்பளத்தை கொடுத்து விடுகிறார்கள். அதனால் சம்பளத்தை கேட்டு யாரிடமும் சென்று பிச்சையெடுக்க தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

அவர் இந்திய சினிமாவில் சம்பளம் தராமல் அலைக்கழிக்கிறார்கள் என்பதைதான் மறைமுகமாக இப்படி பேசுகிறார் என கடுப்பில் இருக்கிறார்களாம் இந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர்.இதில் மேலும் படிக்கவும் :