செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (12:30 IST)

வியக்க வைக்கும் ராதே ஷ்யாம் டிஜிட்டல் விற்பனை விலை!

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் டிஜிட்டல் உரிமை முழுவதையும் ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் படம் என சொல்லப்பட்டது. ஆனாலும் பிரபாஸின் சம்பளம் எல்லாம் சேர்த்து மொத்தமாக 300 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் அனைத்து மொழிகளின் தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜி நிறுவனம் மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. இதுவரை இந்தியாவிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாக ஆர் ஆர் ஆர் திரைப்படம் இருந்தது. அதற்கு அடுத்தபடியாக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது இந்த திரைப்படம்தான் என சொல்லப்படுகிறது.