இனி நடிக்க மாட்டாரா ஆல்யா மானசா!
தனியார் தொலைக்காட்சியில் ஓடும் சீரியல்களில் ரெம்பவே பிரபலமான சீரியல் ராஜா ராணி. இதில கார்த்திக்-செம்பா ரோலில் நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் ஒரு குறும்படம் நடித்தனர். அது பயங்கர ஹிட்டாகியுள்ளது. அண்மையில் ஒரு பேட்டியில் ஆல்யா மானசாவிடம் பட வாய்ப்புகள் பற்றி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், சினிமா வாய்ப்புகள் வருகிறது. ஆனால் நான் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன், அப்படி ஒரு ஆசை இல்லை. முதலில் 3 படங்கள் நடித்தேன், அதில் ஒன்று மட்டும் வெளியானது . சரியாக ஓடவில்லை. என்னுடைய உயரத்தால் தான் எனக்கு போதிய ரீச் கிடைக்கவில்லையோ என்று எனக்கு தோன்றியது.
அதனால் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று எண்ணுவதாக தெரிவித்துள்ளார்.