வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (14:33 IST)

தோழிகளுடன் குரூப் பிகினி போட்டோ - ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் கவர்ச்சி!

இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும்  கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். 


 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.  அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
 
பிறகு அம்மணிக்கு  அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.  இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார் ஆனால் அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய  ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.  
 
இந்த நிலையில் தற்போது தனது தோழிகளுடன் சேர்ந்து ஊர் சுற்றிவரும் ராய் லட்சுமி நீச்சல் உடையில் குரூப் போட்டோவுக்கு ஒய்யாரமாக போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஒரே நைட்டில் லட்சத்தை தாண்டிய லைக்ஸ்களும் , கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Water babies @sonnalliseygall @lostjourno ❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on