வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 10 மே 2017 (19:22 IST)

எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி; கடுப்பில் தமன்னா

பாகுபலி 2 படத்தில் தமன்னா ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவார். அவருக்கு வசனம் கூட இல்லை. இதனால் அவர் செல்லும் இடங்களில் இதுகுறித்தே கேள்வி கேட்கப்படுகிறது என கடுப்பில் உள்ளாராம்.


 

 
பாகுபலி 2 படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் கான் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து விட்டது. இதனால் பாலிவுட் துறை நடிகர் சற்று அச்சத்தில் உள்ளனர்.
 
முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த தமன்னா இரண்டாம் பாகத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். இதில் அவருக்கு வசனம் கூட ஏதுமில்லை. இதனால் சற்று கவலையில் உள்ளாராம்.
 
இந்நிலையில் அவர் செல்லும் இடங்களில் எல்லாம், இதுகுறித்தே அனைவரும் கேட்டு வருகிறார்களாம். இதனால் தமன்னா தற்போது பயங்கர கடுப்பில் உள்ளாராம். மேலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாம். இதனால்தான் அவருடைய பங்களிப்பு மிக குறைவாக உள்ளதாம்.