புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (09:06 IST)

அல்லு அர்ஜுனின் புஷ்பா ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட்!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகி நல்ல வசூலைக் குவித்துள்ளது.

டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் வசூலில் சோடை போகவில்லை. இதுவரை 300 கோடிக்கும் மேலாக திரையரங்கு மூலமாகவே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் திரையரங்குகளில் வெளியாகி 30 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று விதிமுறைகள் இருக்க 20 நாட்களிலேயே வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.