வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 பிப்ரவரி 2019 (17:18 IST)

புல்வாமா எதிரொலி: பாக்கிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை!

புல்வாமா தாக்குதலை அடுத்து எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை வெளியேற்றுமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரைப்படப் பணியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.


 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
 
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கமும் இணைந்து நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


 
மேலும் பாகிஸ்தானை சேர்ந்த பாடகர்கள் பாடிய பாடல்களை கைவிடுமாறும், அவர்களுடன் சேர்ந்து இனி பணியாற்றக் கூடாது என்றும் மகராஷ்டிரா நவநிர்மன் சேனா இசை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில்  எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை வெளியேற்றுமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.