1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (19:11 IST)

பவன்கல்யாண் அடுத்த படத்தின் அறிவிப்பு ஒத்திவைப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் நடிக்க உள்ள படத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிரபல நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் 28வது திரைப்படத்தை ஹரி சங்கர் என்பவர் இயக்க உள்ளார் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இந்த படம் பிரமாண்டமாக உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது
 
மேலும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உகாதி திருநாளில் அறிவிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வேண்டாம் என்று முடிவு செய்து இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதேநேரத்தில் இந்த படம் குறித்து வெளியாகி கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்று அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிக்கும் வரை ரசிகர்கள் பொறுமை காக்கவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது