திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 18 ஜனவரி 2017 (14:14 IST)

அவதூறு... ஆபாசம்... ட்விட்டரிலிருந்து விலகினார் விஷால்

ஜல்லிக்கட்டு விஷயத்தில் தங்களுக்கு எதிராக ஏதாவது பிரபலம் செயல்படுகிறார், பேசுகிறார் என்று கனவு கண்டாலே முட்டித்  தூக்குவது என்றிருக்கிறார்கள் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள். அவர்கள் முதலில் மோதி தகர்த்தது த்ரிஷாவை. அடுத்து விஷால்.

 
விஷாலின் ஜல்லிக்கட்டு தொடர்பான சில ட்வீட்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மீடியாவில் திரித்து சிலர் வெளியிட்டதாக  தெரிகிறது. இது குறித்து விஷால் புகார் தெரிவித்திருந்தார்.
 
விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படுகிறார் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களும், வசைகளும் குவிந்தன.  அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் கணக்கை விஷால் முடக்கியுள்ளார்.
 
இது நிரந்தர முடக்கமா என்பது தெரியவில்லை.