ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (10:15 IST)

ஆதித்ய வர்மாவும் டிராப்பா ? – அலறும் தயாரிப்பாளர்கள் !

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யவர்மா படமும் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான தெலுங்கு ரீமேக் படமான வர்மா தயாரிப்பாளருக்குப் பிடிக்காதக் காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது. அதேப் படத்தை மீண்டும் வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் புதிதாக எடுத்து வருகின்றனர். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக ஒரு படம் முழுவதும் முடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இதையடுத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் இணை இயக்குனரை வைத்தெ அந்த படத்தை மீண்டும் படம்பிடித்து வருகின்றனர். துருவ் விக்ரம்மை தவிட மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் அனைவரும் மாற்ற்ப்பட்டு வருகின்றனர். நேற்று அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கின் டீசர் வெளியானது. அதோடு தமிழ் ரீமேக்கான ஆதித்யவர்மா படம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் அதற்குப் பதிலாக அர்ஜூன் ரெட்டி படத்தையே தமிழில் டப் செய்து வெளியிட இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்புகளைக் கிளப்பியது.

ஆனால் இதை படத்தின் தயாரிப்பாளர்கள் மறுத்துள்ளனர். மேலும் ‘ பொய் தகவல்களை தருபவர்களுக்கு நாங்கள் ஏமாற்றத்தையே தர இருக்கிறோம். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படம் ஜூலையில் வெளியாகும்’ என அறிவித்துள்ளனர்.