மூன்று முகம்' காப்பியா 'மெர்சல்'? அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 'கபாலி' வசூலை முறியடித்து சாதனை செய்து வருவது தெரிந்ததே. இதனால் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படம் 'மூன்று முகம்' படத்தின் காப்பி என்று மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.
ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனத்தின் புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர் அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு அட்லி தகுந்த பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.