வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (11:20 IST)

வைப்புநிதி முழுவதும் காணவில்லை: விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய தயாரிப்பாளர் சங்கம்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நடிகர் விஷால் இருந்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் திடீரென கடந்த 2019-ம் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்க பொறுப்புகளை தனி அலுவலர் மஞ்சுளா என்பவரிடம் ஒப்படைத்தது. இதனால் தயாரிப்பாளர் சங்க கணக்குகள் அனைத்தையும் தனி அலுவலரிடம் அப்போதைய பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஒப்படைத்தார்.
 
இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு முரளி ராமசாமி தலைமையிலான அணி பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் முந்தைய தலைவரான விஷாலிடம் கணக்குகள் தொடர்பான விளக்கத்தை கேட்டு தனி அலுவலரும் தணிக்கை குழுவினரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது
 
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பொருப்பில் விஷால் இருந்தபோது செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகள் தொடர்பான விளக்கத்தினை தனி அலுவலரிடம் ஒப்படைக்குமாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
இதுகுறித்து விஷால் தரப்பினர் கூறியப்போது, ’டிஜிட்டல் முறையில் தயாரிப்பாளர் சங்க கணக்குகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு நாங்கள் செய்த செலவுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்றும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். 
 
ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த வைப்புநிதி முழுவதும் காணாமல் போய்விட்டதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முரளி ராமசாமி அணியின் நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது