புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (13:18 IST)

சீமராஜா வசூல் சாதனையாம் –டிவிட்டரில் தயாரிப்பாளர் பெருமிதம்

சிவக்கார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்த சீமராஜா படத்தின் 50 வது நாளை இன்று டிவிட்டரில் பெருமையாக அறிவித்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.

சிவகார்த்திகேயனும் அவரது ஆஸ்தான தயாரிப்பாளருமான  ஆர் டி ராஜாவும் இணைந்து உருவாக்கிய கடைசி இரண்டு படங்களான வேலைக்காரனும் சீமராஜாவும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதிலும் சீமராஜா மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த தோல்விகளுக்கு காரணமாக சொல்லப்படுவது இந்த படங்களின் தயாரிப்புக்கு செய்யப்பட்ட அளவுக்கு அதிகமான செலவுதான்.

இதையடுத்து இருவரும் மிகப்பெரிய கடன்சுமையில் சிக்கியுள்ள சூழ்நிலையில் சிவக்கார்த்திக்கேயன் இப்போது சின்ன பட்ஜெட் படத்தில் நடிக்க முடிவு செய்து ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் சீமராஜா தோல்வியை வெளிக்காட்டிக் கொள்ளாத படத்தின் தயாரிப்பாளர் தற்போது சீமராஜா படத்தின் 50 வது நாளைக் கொண்டாடும் விதமாக தனது டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ‘சீமராஜா 50வது நாளில், விமர்சனங்களை முழு மனதாக ஏற்பதோடு, இந்த ஆண்டு ஜனவரி முதல் வெளியான படங்களில், வசூலில் முதல் வரிசையில் வைத்து கொண்டாடிய அனைத்து ரசிகர்கள், ஊடக நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.