புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (14:48 IST)

அஜித்தின் முதல்பட தயாரிப்பாளர் மரணம் – சக கலைஞர்கள் அஞ்சலி !

நடிகர் அஜித்தின் முதல்படமான பிரேம புஸ்தகம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கொல்லுப்புடி மாருதி ராவ் நேற்று காலமானார்.

பழம்பெரும் தயாரிப்பாளரும் நடிகருமான  கொல்லப்புடி மாருதி ராவ்(80) நேற்று சென்னையில் உடல்நலக் கோளாறு காரணமாக இயற்கை எய்தினார். தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வில்லன், காமெடி, குணச்சித்திரம் போன்ற கேரக்டர்களில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது மகனை இயக்குனராக அறிமுகப்படுத்தி தெலுங்கில் பிரேமெ புஸ்தகம் எனும் படத்தைத் தயாரித்தார். ஆனால் படப்பிடிப்பின் பாதியிலேயே அவரது மகன் கொல்லுப்புடி சீனிவாஸ் இறந்துவிட்டதால் மீதிப் படத்தை அவரே இயக்கினார். இந்தப் படத்தில்தான் அஜித் முதன் முதலாக அறிமுகமானார். மேலும் தனது மகனின் பெயரில் வருடா வருடம் சிறந்த படங்களை இயக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு விருதுகளை அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.