ஆல் இன் ஒன்... 17 விதமான பிரியா பவானி ஷங்கர்!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியன் 2 மற்றும் ராகவா லாரன்சுடன் ருத்ரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கருப்பு வெள்ளையில் 17 விதமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த புகைப்படங்களை கொலாஜ் செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டு, நான் மிகவும் சந்தேகத்திற்கு இடமில்லாதவள், எனக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதும் சிக்கல் உள்ளது. எனவே இங்கே எல்லா புகைப்படத்தையும் வெளியிட்டுவிட்டேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வித்யாசமான புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.