நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
நடிகை பிரியா பவானி சங்கர் நமிதாவை கிண்டல் செய்யும் விதமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்துள்ளார்.
தப்பும் தவறுமாய் தெரிந்த தமிழை பேசினாலும் குறிப்பிடத்தகுந்த ரசிகர்களை பெற்றவர் நமீதா. மானாட மயிலாட காலத்திலிருந்தே இவரது மச்சான்ஸ் டயலாக் மிகவும் பிரபலம். சில நாட்களாக ஆள் அடையாளம் தெரியாமல் இருந்தவர் பிக்பாஸ் மூலம் மீண்டும் பேசப்பட்டார். இந்நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ள அவர் தேர்தல் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். பொங்கல் நெருங்கி வரும் நிலையில் பாஜக சார்பில் தமிழக மாவட்டங்களில் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறாக சென்னை நுங்கம்பாக்கத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நமீதா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் “எல்லாருக்கும் போங்கல் நல்வாழ்த்த்துக்கள் போங்கலோ போங்கல்” என கூறியுள்ளார். பொங்கல் என்பதை தவறுதலாக போங்கல் என அவர் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நமீதாவின் இந்த பேச்சு இணையத்தில் பரவலாக கேலி செய்யப்பட்டு மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது நடிகை ப்ரியா பவானி சங்கரும் அதை கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார். அவரது சமூகவலைதளப் பக்கத்தில் இப்படியாக பொங்கல் இனிதே கடந்தது when I planned a பொங்கல் and God gave me a போங்களோ போங்கள் எனக் கூறியுள்ளார். பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக பணியாறியவர் என்பதும் இருப்பதிலேயே தமிழை நன்றாக பேசத்தெரிந்த நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.