1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 நவம்பர் 2020 (21:04 IST)

பவன் கல்யாணை விமர்சித்த பிரகாஷ் ராஜ் – பதிலளித்த சகோதரர்!

நடிகரும் அரசியல் வாதியுமான பவன் கல்யாணின் அரசியல் நிலைபாட்டை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண். சூப்பர் ஹிட் படங்களைக்கொடுத்த நடிகர். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்டவர் பவன் கல்யாண். இதுவரை 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவில் மிகப்பெரிய மாஸ் ஹீரோவான இவர் அரசியலில் இறங்கினார்.

மக்களவைத் தேர்தல் மற்றும்  ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிட்டார். மேலும் .அவரே இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தோல்வியைத் தழுவினார். அதனால் அரசியலில்  பவன் கல்யாணும் அரசியலில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் மீண்டும் அவர் இப்போது சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதே போல தேர்தலிலும் தனது நிலைப்பாட்டை மாற்றி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் இப்போது பவன் கல்யாணின் இந்த முடிவையும் விமர்சனம் செய்ய அது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரகாஷ் ராஜின் விமர்சனத்துக்கு பவன் கல்யாணின் சகோதரர் நாக பாபு பதிலளித்துள்ளார். அதில் ‘அரசியலின் நோக்கமாக நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு சேவை செய்வதுதான். பவன் கல்யாண் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கும் என நம்புகிறேன். போலி அறிவுஜீவிகள் எவ்வளவு பேர் முயன்றாலும் எங்கள் வெற்றியைத் தடுக்க முடியாது. நீங்கள் தயாரிப்பாளர்களை எவ்வளவு அல்லல் படுத்தினீர்கள் என்பது எனக்கு தெரியும். நீங்கள் செய்த குழப்பங்கள் எல்லாம் அனைவருக்கும் தெரியும். பவன் கல்யாண் பற்றி பேசும் முன்னர் நாம் இருவரும் பேசுவோம்’ எனக் கூறியுள்ளார்