ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:03 IST)

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் இணைந்த அனுபமா பரமேஸ்வரன்!

கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்போது இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் முக்கியமானக் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் மிஷ்கின் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் வி ஜே சித்து ஒரு வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை படத்தின் கதாநாயகி யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.