ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 26 ஜனவரி 2022 (17:07 IST)

பிரபுதேவாவின் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா என்பதும் அவர் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களை தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபுதேவா நடிப்பில், அன்பு  இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் ரேக்ளா என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.  ரேக்ளா ரேஸ் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இவ்வருட இறுதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது