திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (21:57 IST)

பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸ்- பூஜா ஜெக்டே நடிப்பில் உருவாகிவரும் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற

நடிகர் பிரபாஸ், தற்போது ’ராதே ஷ்யாம்’ ‘சலார்’ மற்றும் ஆதிபுருஷ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி  அறிவிக்கப்பட்டு  பின்னர் கொரோனா  ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது.

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் 'ராதே ஸ்யாம்' பட ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில், அடுத்தாண்டு(2022) ஜனவரி 14 ஆம் தேதி இப்படம்  தியேட்டர்களில் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.