புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:42 IST)

பிரபாஸின் ’’ராதே ஷ்யாம் ’’பட முக்கிய அப்டேட்!

பிரபாஸ் நடித்துவரும் ராதே ஸ்யாம் படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் காதலர் தினத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம் இந்தியாவின் எல்லைகளைத் தாண்டிய உலக அளவில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அவருக்கு அரசிகர்கள் வட்டாரம் விரிந்தது.

அத்துடன் பிரபாஸின் சம்பளமும் நூறு கோடியைத் தாண்டிவிட்டதாகத்
தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் தற்போது நடித்துவரும் ராதே ஷ்யாம் படத்தின் தயாரிப்பாளர் வரும்  கடந்த அக்டோபர்  23 ஆம் தேதி ராதே ஷ்யாம் படத்தின் போஸ்டர் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.