1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (07:35 IST)

பிரபாஸ் நடிக்கும் ‘ராஜாசாப்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் புதுப் படத்துக்காக இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் தலைப்பு ‘ராஜா சாப்’ என அறிவிக்கப்பட்டு முதல் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

பிரபாஸ் கையில் பூக்களோடு யாருக்கோ காதலை வெளிப்படுத்த செல்வது போல இந்த வீடியோ துணுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. படம் ஹாரர் காதல் கதையாக உருவாகி வருவதாகவும் அந்த முன்னோட்டத்தில் தெரிவித்துள்ளனர். பேன் இந்தியா ரிலீஸாக உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.